பிரான்சுக்கு அதிக வாய்ப்பு நிஸ்னி நோவ்கொரோட்: கிண்ணம்

பிரான்சுக்கு அதிக வாய்ப்பு நிஸ்னி நோவ்கொரோட்: கிண்ணம்

2 mins read
6322a470-99d0-4af0-8949-5fc6ef7aa88c
-

வெல்ல வாய்ப்புள்ளதாகப் பலரும் முன்னுரைத்த ஐந்து அணிகளில் இரண்டு மட்டுமே காலிறுதியில் உள்ளன. அதில் ஒன்று, ஐந்து முறை வெற்றியாளரான பிரேசில். மற்றொன்று, 1998 இறுதிப் போட் டியில் அதை வீழ்த்திய பிரான்ஸ். இந்த நிலையில், இரண்டாவது முறையாக வென்று கிண்ணத்தை உயர்த்திப் பிடிக்கும் முனைப்புடன் இருக்கும் பிரான்ஸ், இன்று நடக்க உள்ள முதலாவது காலிறுதியில் உருகுவேயுடன் மோதுகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளில் மட்டுமல்லாது, நட்புமுறை ஆட்டங் களிலும் பிரான்ஸ் ஒருமுறைகூட உருகுவேயை வென்றதில்லை என்பது வரலாறு.

இவ்விரு அணி களும் இதுவரை ஆறுமுறை மோதியுள்ளன. அதில் இரு ஆட்டங்களில் உருகுவே வெற்றி பெற்றது. மற்ற நான்கும் சமனில் முடிந்தன. இருப்பினும், இம்முறை உருகு வேயைக் காட்டிலும் பிரான்ஸ் வலுவான அணியாகக் காட்சியளிப் பதால் அரையிறுதிக்கு முன்னேற அவ்வணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. கிரீஸ்மன், ஜிரூ ஆகிய பிரெஞ்சு தாக்குதல் வீரர்கள் இதுவரை சோபிக்காதபோதும் இளம் வீரரான கிலியன் இம்பாப்பே இன்றைய ஆட்டத்தில் உருகுவே அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜெண்டினாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தில் இரு கோல்களை அடித்த துடன் ஒரு பெனால்டி வாய்ப்பையும் அவர் பெற்றுத் தந்தார்.

அர்ஜெண்டினாவிற்கு எதிராக இரு கோல்களை அடித்து பிரான்சின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 19 வயது கிலியன் இம்பாப்பேயை (இடது) கட்டுப்படுத்தும் ஆற்றல் தங்களது தற்காப்பு வரிசைக்கு இருப்பதாக மார்தட்டுகிறார் உருகுவேயின் சுவாரெஸ். படம்: ஏஎஃப்பி