கஸன்: நடப்பு உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் ரசிகர்களின் அதிக ஆதரவைப் பெற்றுள்ள அணிகளாகத் திகழும் பிரே சிலும் பெல்ஜியமும் அரையிறுதி வாய்ப்பிற் காக இன்றிரவு களத்தில் நேருக்கு நேர் மல்லுக்கட்டவுள்ளன. வலுமிக்க அணியாகக் களம் கண்டு இருக்கும் பிரேசில், கடந்த மூன்று தொடர் களில் இரண்டு முறை காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. 2014ல் சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் நான்காமிடம் பிடித்தது. ஆகையால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிண்ணத்தை வென்று, நாட்டிற்குப் பெருமை சேர்க்கவேண்டும் எனும் சுமை பிரேசில் வீரர்களின் தோள்களில் உள்ளது.
பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மாரின் ஆட்டம் இன்றும் திடலில் ஒளிவீசும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சிறிய உடல்வாகைக் கொண்டிருந்தாலும் திடலில் துடிப்புடன் விளையாடும் வில்லியனின் ஆட்டமும் அவ்வணிக்குப் புதிய பரிமாணத்தை அளித்து வருகிறது. ஜோவோ மிராண்டாவுடன் பிரேசிலின் தற்காப்புத் தூணாகத் திகழ்ந்து வரும் அணித்தலைவர் தியாகோ சில்வா, அரை இறுதிக்கு அருகே சென்றுவிட்டோம் என மார்தட்டுகிறார். "நாங்கள் முன்னேறி வரு வது தெள்ளத் தெளிவு," என்றார் அவர்.
மெக்சிகோவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் தம் பங்கிற்கு ஒரு கோலை அடித்ததுடன், இன்னொரு கோல் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தார் நெய்மார். ஆனாலும், நடுவர் சாதகமான முடிவை அறிவிப்பதற்காக வேண்டுமென்றே திடலில் பாய்வதாலும் விழுந்து புரண்டு வலியால் துடிப்பதுபோல நடிப்பதாலும் அவர் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அவ்வணியின் முன்னாள் நட்சத்திரங்களான ரொனால்டோவும் ரிவால் டோவும் நெய்மாரைத் தற்காத்துப் பேசியுள் ளனர்.
கஸன் நகரில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு வந்த தம்மை வரவேற்ற ரசிகர்களை நோக்கி 'கிண்ணம் வெல்வது திண்ணம்' எனும்படியாக கட்டைவிரலை உயர்த்திக் காட்டும் பிரேசில் வீரர் நெய்மார். படம்: ஏஎஃப்பி

