சமாரா: அரையிறுதி வாய்ப்பைக் கைப்பற்றுவதற்காக இங்கிலாந்து அணி இன்றிரவு சுவீடனுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது. சுவீடன் அணி காலிறுதிக்கு முன்னேறியதே பலருக்கு ஆச்சரிய மாக இருக்கலாம். ஆனால், "அவர்களைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது," என சக இங்கிலாந்து வீரர்களை எச்சரித்து உள்ளார் அவ்வணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜான் ஸ்டோன்ஸ். "சுவீடன் திறமையான ஆட்டக் காரர்களைக் கொண்ட, கட்டுக் கோப்பான அணி. அதனால்தான் அவர்கள் இந்த நிலையை எட்டி உள்ளனர்," என்றார் ஸ்டோன்ஸ். இங்கிலாந்து அணியின் முன் னாள் பயிற்றுவிப்பாளர் ஸ்வென் கோரன் எரிக்சனும் இதை எதி ரொலித்துள்ளார்.
"சுவீடனுக்கு எதிராக கோல் அடிப்பது மிகக் கடினமான செயல். என்னைக் கேட்டால், சுவீடனை விட பிரேசிலை வீழ்த்துவது இங்கி லாந்துக்கு எளிதாக இருக்கக் கூடும்," என்று எரிக்சன் குறிப்பிட் டார். இவ்விருவரும் எச்சரிப்பது போல சுவீடன் தற்காப்பில் வலு வான அணியாகத் திகழ்கிறது. ஜெர்மனிக்கு எதிராக இரு கோல் களை விட்டுக்கொடுத்தபோதும் மற்ற மூன்று ஆட்டங்களில் சுவீ டனின் தற்காப்பை எதிரணிகளால் தகர்க்க முடியவில்லை. அது இன்றும் தொடரும் என்கிறார் சுவீடன் அணித்தலைவர் ஆண்ட் ரியாஸ் கிரான் குவிஸ்ட்.
"நாங்கள் ஆடிய ஆட்டங்களைப் பார்த்தால், எங்களைவிட எதிரணி யின் வசமே பந்து அதிக நேரம் இருந்திருக்கும். ஆனால், அதிக கோல் வாய்ப்புகளை, அபாயகர மான வாய்ப்புகளை உருவாக்கியது நாங்களே. இதுதான் எங்களது பாணி. வெற்றியை ஈட்ட நாங்கள் கையாளும் வழியும் இதுதான்," என்றார் அவர். அதேபோல, இடைநீக்கம் முடிந்து அணிக்குத் திரும்பும் சுவீடன் மத்தியத் திடல் ஆட்டக் காரர் செபாஸ்டியன் லார்சனும் இங்கிலாந்து அணிக்குக் கடும் நெருக்கடி அளிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
52 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்திற்கு உலகக் கிண்ணத்தை வென்று தர விரும்புவதோடு அதிக கோலடித்த வீரருக்கு அளிக்கப்படும் தங்கக் காலணியையும் தனதாக்கத் துடிக்கும் அந்த அணியின் தலைவர் ஹேரி கேன் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

