வெற்றிக் கனவு தகர்ந்ததால் விரக்தியில் மூழ்கிய பிரேசில்

வெற்றிக் கனவு தகர்ந்ததால் விரக்தியில் மூழ்கிய பிரேசில்

2 mins read
78177db8-2b25-4d5c-ab31-b25aed1a0110
-

உலகக் கிண்ண ஆட்டங்களில் பல வியப்புகளும் விந்தைகளும் நிகழ்ந்தபோதிலும் பிரேசிலை பெல்ஜியம் வீழ்த்தி சாதனை படைத்ததுதான் ஆக அண்மைய வியப்பு. ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அரையிறுதிக்கு முன்னேற முடி யாமல் 2=1 என்ற கோல் கணக் கில் தோற்றுப்போனதை அந்த அணியின் ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதிலும் கடைசி நம்பிக்கை யாக நெய்மாரின் கோலை எதிர் பார்த்த ரசிகர்கள் ஏமாந்து தவித் தனர். வளைந்து அடித்த நெய் மாரின் பந்து கோல் ஆக வேண் டியது. அப்படி ஆகியிருந்தால்கூட ஆட்டம் சமன் கண்டிருக்கும்.

ஆனால், பெல்ஜியம் கோல் காப் பாளர் திபோ கோர்ட்டுவா தமது விரல்களால் லாவகமாகப் பந்தை தட்டிவிடவே பிரேசிலின் வெற்றிக் கனவு தகர்ந்தது. பிரேசிலின் தோல்விக்குப் பிள் ளையார் சுழி போட்டவர் அந்த அணியின் ஃபெர்னாண்டினோ என்றுதான் சொல்ல வேண்டும். 13வது நிமிடத்தில் பெல்ஜியத் துக்கு 'கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தபோது சாட்லி அடித்த பந்து ஃபெர்னாண்டினோவின் தோளில் பட்டு சொந்த கோல் ஆகப் புகுந்தது. உலகக் கிண்ணத் தொடரின் எல்லா ஆட்டங்களிலும் பெல்ஜியம் வெற்றி பெற்றிருந்ததால் 'வெல்வோமா' என பிரேசில் ரசி கர்களிடம் கிளம்பிய சந்தேகம் ஃபெர்னாண்டினோ தாரை வார்த்துக் கொடுத்த கோல் மூலம் கொஞ்சம் வலுவடைந்தது.

இதற்கு முந்திய ஆட்டங்களில் காட்டிய வேகத்தைக் காட்டிலும் பிரேசிலுடன் அசுர வேகத்தில் ஆடியது பெல்ஜியம். 31வது நிமி டத்தில் கெவின் டி பிரய்ன தூரத் தில் இருந்து அடித்த பந்து கோல் வளைக்குள் புகுந்தது. இரண்டு கோல்களுடன் முன்னிலை பெற் றதன் மூலம் பெல்ஜியம் வீரர் களுக்கு நம்பிக்கை பிறந்தது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற கவனத்தி லேயே ஆடத் தொடங்கிய அவர் கள் பிரேசிலின் கோல் முயற்சி களைத் தடுப்பதில் தீவிரம் காட்டி னர். இருப்பினும் அவர்களின் தடுப்புத் திறனையும் மீறி 76வது நிமிடத்தில் பிரேசில் தனது முதல் கோலை போட்டது. கொட்டின்யோ தந்த பந்தை அகஸ்டோ தலையால் முட்டி கோலாக்கினார். இன் னொரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்ய பிரேசில் எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை.

பெல்ஜியத்தின் அற்புதமான தற் காப்பு ஆட்டம் பிரேசிலின் அத் தனை முயற்சிகளையும் முறியடித் தது. குறிப்பாக பிரேசிலின் தோல் விக்கு முக்கிய காரணமாக இருந் தவர் பெல்ஜியம் கோல் காப் பாளர் கோர்ட்டுவாதான். பிரேசி லின் கோல் முயற்சிகளை சாமர்த் தியமாகத் தடுத்ததன் மூலம் ஆட்ட நாயகனாக ஜொலித்தார் அவர்.

ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசிலுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டது பெல்ஜியம். படம்: ராய்ட்டர்ஸ்