லண்டன்: ஒன்பதாவது முறையாக விம்பிள்டன் பொது விருது பட்டத்தைக் குறிவைத்துக் களம் இறங்கியுள்ள சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் நான்காம் சுற்றுக்குள் எளிதாக நுழைந்தார். நடப்பு வெற்றியாளரான 36 வயது ஃபெடரர் மூன்றாம் சுற்றில் தம்மை எதிர்த்து விளையாடிய ஜெர்மானியர் யான் லெனர்ட் ஸ்ட்ரஃப்பை 6-3, 7-5, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அவர் பிரெஞ்சு ஆட்டக்காரர் ஏட்ரியன் மனரனோவுடன் பொருதவிருக்கிறார். முன்னதாக, பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில் ஐந்து முறை வெற்றியாளரான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தோற்று வெளியேறினார். அவர் நெதர்லாந்தின் கிக்கி பெர்ட்டென்சிடம் 6-2, 6-7, 8-6 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வினார். அதே நேரத்தில் அவருடைய சகோதரியான செரீனா வில்லியம்ஸ் 7-5, 7-6 என நேர் செட்களில் பிரெஞ்சு வீராங்கனை கிறிஸ்டினா மிலாடினோவிச்சைத் தோற்கடித்து, நான்காம் சுற்றினுள் நுழைந்தார்.
டென்னிஸ்: 4வது சுற்றில் ஃபெடரர்
1 mins read

