பிடியை இறுக்கும் பிரான்ஸ்

பிடியை இறுக்கும் பிரான்ஸ்

1 mins read
f2b045a7-1ded-41e6-882c-4eedb40480dd
-

நிஸ்னி நோவ்கொரோட்: வலுவான தற்காப்பைக் கொண்ட உருகுவே அணியைக் காலிறுதியில் 2=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி யதன்மூலம் உலகக் கிண்ணத்தை நோக்கிய தனது பயணத்தை பிரான்ஸ் அணி வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறது. முந்தைய ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்த உருகுவே தாக்குதல் ஆட்டக்காரர் எடின்சன் கவானி காயம் காரணமாக கால் இறுதி ஆட்டத்தில் களமிறங்காதது பிரான்சுக்கு சாதகமாக அமைந்தது.

முற்பாதி ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது தற்காப்பு வீரர் ரஃபாயல் வரன் தலையால் முட்டி அற்புதமான கோலால் 1=0 என்ற முன்னிலையுடன் இடைவே ளைக்குச் சென்றது. பிற்பாதி தொடங்கி கால் மணி நேரத்தில் பிரான்சுக்கு இன்னும் ஒரு கோல் கிடைத்தது. தொலை வில் இருந்து கிரீஸ்மன் அடித்த பந்து உருகுவே கோல்காப்பாளர் ஃபெர்னாண்டோ முஸ்ரெலாவின் கைகளில் பட்டும் வலைக்குள் புகுந்தது. மிக எளிதாகத் தடுத்து இருக்க வேண்டிய பந்தை அவர் கோட்டைவிட்டது கண்டு காற் பந்து உலகமே அதிர்ச்சி அடைந் தது.

நட்சத்திர வீரர் சுவாரெசாலும் பிரான்சின் தற்காப்பை உடைத்து முன்னேற முடியாததால் உருகுவே யின் கோல் முயற்சி எதுவும் ஈடேற வில்லை.

உருகுவேக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பிரான்சின் முதல் கோலை அடித்த ரஃபாயல் வரனை (நடுவில்) பாராட்டி மகிழும் கிரீஸ்மன் (இடது), இம்பாப்பே. படம்: ராய்ட்டர்ஸ்