அபாயகரமான அணியாக உருவெடுத்திருக்கிறது பெல்ஜியம்

அபாயகரமான அணியாக உருவெடுத்திருக்கிறது பெல்ஜியம்

2 mins read
2345e3a0-9073-4e26-9a67-b4202c37c53a
-

கஸான்: காற்பந்துத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் உலகக் கிண்ணம் வெல்ல வாய்ப் புள்ள அணியாக எவரும் பெல் ஜியத்தைக் குறிப்பிடவில்லை. காற்பந்து வித்தகர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளை யாடி வருவதால்தான் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணிக் குழுக்கள் பெல்ஜிய ஆட்டக்காரர்களைப் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன.

குழு அளவிலான போட்டிகளில் பெல்ஜிய வீரர்கள் சோபித்து வருவது வெளிப்படை. ஆனாலும் 2014 உலகக் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவிட மும் 2016 யூரோ கிண்ணக் கால் இறுதியில் வேல்ஸ் அணியிடமும் பெல்ஜியம் தோற்றிருந்தது. அதனால், உலகக் கிண்ணத் தொடர் போன்ற முக்கிய போட்டி களில் அவர்களால் மிளிர முடி யாது எனக் கருதிய காற்பந்து விமர்சகர்கள், இம்முறையும் அந்த அணி கிண்ணம் வெல்வது மிகக் கடினம் என்று முன்னுரைத்திருந் தனர். இது ஒருவகையில் பெல்ஜிய வீரர்களுக்குச் சாதகமாகப் போய் விட்டது. ஏனெனில் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்ட ஐந்து அணிகளுள் நான்கு ஏற்கெனவே வெளியேறி விட்டன.

இதனால் எந்த நெருக்கடியும் இல்லாமல், அதே நேரத்தில் குறிக் கோளில் கண்ணும் கருத்துமாய் இருந்து அவர்களால் கவனமாக ஆட முடிகிறது. இதுவரை ஆடிய ஐந்து ஆட் டங்களிலும் வெற்றியை ஈட்டியது. அதிலும் காலிறுதியில் பிரேசிலுக்கு எதிராக 2- 1 என்ற கோல் வித்தி யாசத்தில் பெற்ற வெற்றி, கால காலமாக பெல்ஜிய மக்களின் நினைவில் நிலைத்திருக்கும், எதிர்கால ஆட்டக்காரர்களுக்கு உத்வேகம் தருவதாய் அமையும் என்றால் அது மிகையில்லை.