குரோவே‌ஷிய துணைப் பயிற்றுவிப்பாளர் நீக்கம்

குரோவே‌ஷிய துணைப் பயிற்றுவிப்பாளர் நீக்கம்

1 mins read
37479e7a-4642-45c5-8417-4d63f7651eeb
-

மாஸ்கோ: உலகக் கிண்ண காற் பந்தின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவைத் தோற்கடித்தது குரோ வே‌ஷியா. இதைக் கொண்டாடும் விதமாக 'உக்ரேனுக்கு வெற்றி' என்ற தலைப்பில் காணொளி ஒன்றை குரோவே‌ஷிய அணியின் துணைப் பயிற்றுவிப்பாளரான ஆன்யன் வுக்கோயெவிச் என்ப வரும் அந்நாட்டு தற்காப்பு ஆட்டக் காரரான டொமகாய் விதா என்ப வரும் வெளியிட்டனர். இதற்கு ரஷ்யாவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இதை அடுத்து, குரோவே‌ஷிய காற்பந்துச் சங்கம் வுக்கோயெவிச்சை துணைப் பயற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளது. முன்னதாக, வுக்கோயெவிச்சை ரஷ்ய அரசியல்வாதிகள் குறைகூற அவருக்கு ஃபிஃபா ஒழுங்குமுறை கண்காணிப்புக் குழு எச்சரித்தது. கிரைமிய தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிர மித்து இணைத்துக்கொண்டு பின்னர் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள போராளிகளுக்கு ஆதரவளித்து வரும் நிலையில் அந்நாட்டுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்பு அடைந்துள்ளன. தற்போதைய சம்பவத்தால் குரோவே‌ஷிய காற்பந்துச் சங்கம் வுக்கோயெவிச்சின் உலகக் கிண் ணப் போட்டிகளுக்கான அங்கீகா ரத்தை ரத்து செய்துள்ளது.

துணைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆன்யென் வுக்கோயெவிச் (இடது) உடன் குரோவே‌ஷிய காற்பந்து டொமகாய் விதா. காணொளிப்படம்