மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்கிய போது இங்கிலாந்தும் குரோவேஷி யாவும் அரையிறுதியில் பொருதும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், எதிர்ப்பட்ட எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து இறுதிச் சுற்றுக்குள் நுழைவதற் கான போட்டியில் இன்றிரவு இவ் விரு அணிகளும் மோதுகின்றன. இங்கிலாந்து 'நாக் அவுட்' சுற்றில் கொலம்பியாவையும் சுவீட னையும் வீழ்த்தியது. மாறாக, முதற்சுற்றில் மூன்று ஆட்டங் களிலும் வெற்றி பெற்ற குரோ வேஷியா, 'நாக் அவுட்' சுற்றில் டென்மார்க்கையும் ரஷ்யாவையும் போராடித்தான் வெல்ல முடிந்தது.
அவ்விரு ஆட்டங்களும் கூடு தல் நேரத்தையும் தாண்டி, 'பெனால்டி ஷூட் அவுட்' வரை சென்றதால் குரோவேஷிய அணி யினர் களைப்படைந்து இருக்க லாம். அதனால் அரையிறுதியில் அவர்களால் முழு ஆற்றலுடனும் துடிப்பாகவும் விளையாட முடியா மல் போகலாம் எனச் சொல்லப் படுகிறது. அந்த இரு ஆட்டங்களிலும் குரோவேஷிய அணியின் நாயக னாக ஒளிர்ந்தார் கோல்காப்பாளர் சுபசிச். ரஷ்யாவிற்கு எதிரான காலிறுதியில் பின்தொடைத் தசை நாரில் அவர் காயமடைந்தபோதும் வலியைப் பொறுத்துக்கொண்டு ஆடினார். இந்நிலையில், பூரண குணமடைந்து முழு உடற்தகுதி யுடன் அவர் இன்று களமிறங்கு வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேரி கேனின் (வலது ஓரம்) இங்கிலாந்து அணிக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் / ஏஎப்பி

