28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்ட இங்கிலாந்து

28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்ட இங்கிலாந்து

1 mins read
f3dcf7a4-a524-4477-9bb2-58fd34c276ad
-

உலகக் கிண்ண காற்பந்து வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. 1950க்குப் பிறகு சிறியதொரு நாடு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு கனிந்துள்ளது. நேற்று அதிகாலையில் இங்கிலாந்தை அதிர்ச்சிக் குள்ளாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள குரோவே‌ஷியா வெற்றி வேட்கையுடன் காத்திருக்கிறது. இங்கிலாந்துடன் மாஸ்கோ திடலில் அது ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் இறுதிப் போட்டியில் பிரான்சுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று கருத முடிகிறது. சிறிய நாடுகளில் ஒன்றான உருகுவே 1950ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பின்னர் அதனைவிட பெரிய நாடுகளின் கைகளிலேயே கிண்ணம் அடைக்கலமானது.

பிரேசில் (207 மில்லி யன்), ஜெர்மனி (83 மில்லியன்), பிரான்ஸ் (67 மில்லியன்), இத்தாலி (60 மில்லியன்), இங்கிலாந்து (53 மில்லியன்), அர்ஜெண்டினா (43 மில்லியன்) என அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளே வெற்றி கண்டு வந்துள் ளன. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண் டாவது முறையாக அரை இறுதியில் நுழைந்த குரோவே‌ஷியா இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் தோல்வியைக் கண்டு அதிர்ச்சியில் சிலர் வாய்பொத்தினர், சிலர் வாய் பிளந்தனர். லண்டன் நகரின் டிராஃபல்கர் சதுக்கத்தில் தொலைக்காட்சி மூலம் அரை இறுதிப் போட்டியைக் கண்ட ரசிகர்கள் இப்படி உறைந்துபோனார்கள். படம்: ராய்ட்டர்ஸ்