விழாக் கோலம் பூண்ட ஸாக்ரேப்

விழாக் கோலம் பூண்ட ஸாக்ரேப்

1 mins read
72f69c39-2554-4028-89e7-210b57cee092
-

ஸாக்ரேப்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத் துக்கு முதல்முறை யாக குரோவே‌ஷியா தகுதி பெற்றதை அடுத்து அந்நாட்டின் தலைநகரம் ஸாக்ரேப்பில் நேற்று கொண்டாட்டம் களைகட்டியது. ஆட்டம் முடிந்ததும் குரோவே‌ஷிய மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தும் மதுபானக் கூடங்களிலிருந்தும் உணவகங் களிலிருந்தும் பெருந்திரளாக வெளியே வந்து கொண் டாட்டத்தில் மூழ்கினர். ஸாக்ரேப்பின் மத்திய வட்டாரத்தில் ஏறத்தாழ 10,000 பேர் கூடினர். கார்களின் ஹார்ன்கள் ஒளிக்க, குரோவே‌ஷிய கொடிகள் கம்பீரமாகப் பறக்க, குரோவே‌ஷியர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். தங்களது குழு கிண்ணம் வெல்லும் என்பதில் அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.