சமபலத்துடன் மோதும் அணிகள்

சமபலத்துடன் மோதும் அணிகள்

1 mins read
8219df1e-f3c9-4b6b-91c1-f8d501a92ccd
-

பிரான்ஸ், நன்கு திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்ட அணியாகக் காணப்படுகிறது. எதிர்த்தாக்கு தலில் வலிமையான அணி. பந்தைக் கடத்துவதில் மட்டும் சற்று சறுக்கி வருகிறது. குரோ வே‌ஷியாவைப் பொறுத்தவரை, கோல் கட்டத்திற்குள் வரும் பந்தைத் தடுத்து தன்வசப்படுத்து வதில் தடுமாறி வருகிறது. மோட் ரிச்சும் ரகிட்டிச்சும் மத்தியத் திடல் பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போதும் பெரிசிச் சிறப்பாக ஆடும் போதும் குரோவே‌ஷியா பலமிக்க அணியாகக் காட்சியளிக்கிறது.

பிரான்ஸ் இறுதிப் போட்டியில் விளையாடுவது இது மூன்றாவது முறையாக இருக்கலாம். ஆனா லும், அனுபவம் எனப் பார்த்தால், இரு அணி வீரர்களும் இறுதிப் போட்டியில் விளையாடுவது முதல் முறை என்பதால் சமபலத் துடனேயே உள்ளனர். இறுதிப் போட்டியில் அவர்கள் ஆடும் விதமே முடிவைத் தீர்மானிக்கும். குரோவே‌ஷியா விளையாடிய கடைசி மூன்று ஆட்டங்களும் கூடுதல் நேரம் வரை சென்றதால் அவ்வணியினர் சற்றுக் களைப் பாக உணரலாம்.

வி.சுந்தரமூர்த்தி, 52, சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரர் & பயிற்றுவிப்பாளர்