லண்டன்: முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் எழுச்சியுடன் ஆடி 86 ஓட்ட வித் தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் தொடர் 1=1 எனச் சமநிலையை எட்டியுள்ளது. முதல் போட்டியில் ஆடிய அணி களில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. முதல் போட்டியைப் போல இம்முறையும் இங்கிலாந்து அணியே முதலில் பந்தடித்தது. ஜேசன் ராயும் (40) பேர்ஸ்டோவும் (38) நல்ல தொடக்கம் தந்தனர். ஆயினும், அவ்வணியின் ஓட்டக் குவிப்புக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் ஜோ ரூட். முதல் போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த அவர், இம்முறை சதம் விளாசினார். 113 ஓட்டங் களைக் குவித்த அவர், கடைசி பந்தில் 'ரன் அவுட்' ஆனார்.
2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
1 mins read
-

