உலகக் கிண்ணத்தில் ஆடியோருக்கு ஓய்வு: மொரின்யோ அதிரடி முடிவு

உலகக் கிண்ணத்தில் ஆடியோருக்கு ஓய்வு: மொரின்யோ அதிரடி முடிவு

1 mins read

மான்செஸ்டர்: 2018-19 இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் முன்கூட்டியே தொடங்குவது மான்செஸ்டர் யுனைடெட் குழு நிர்வாகி ஜோசே மொரின்யோவிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இதனால், ஆகஸ்ட் 11ஆம் தேதி நடக்க இருக்கும் அக்குழுவின் முதல் ஆட்டத்தில் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிப்பது என்று அவர் முடிவு செய்திருக்கிறார்.

பால் போக்பா, நெமான்யா மாட்டிச், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், ஜெஸி லிங்கார்ட், மருவான் ஃபெலைனி, டாவிட் ட கியா ஆகிய யுனைடெட்டின் முக்கிய வீரர்கள் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றனர். அதனால் அவர்கள் களைப்பாக இருக்கலாம் என்ற மொரின்யோ, நன்றாக ஓய்வெடுத்து, மீண்டும் முழு உடற்திறனுடன் திரும்ப அவர்களுக்குப் போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்று சாடினார். "உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய வீரர்களை முதல் போட்டியில் களமிறக்க முடியாமல் போயுள்ளது. குழு அளவில் ஐரோப்பாவின் மிக முக்கிய காற்பந்துத் தொடராகத் திகழும் இபிஎல்லுக்கு இது பெரும் அவமானம்," என்றார் அவர்.