இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது பெல்ஜியம்

1 mins read
4e03e9f8-c995-4adf-be32-975c13b6c8fa
-

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட் டத்தில் பெல்ஜியம் 2=0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கி நான்காவது நிமிடத்தில் தாமஸ் மியூனியரும் ஆட்டம் முடிய எட்டு நிமிடங்கள் இருந்தபோது அணித்தலைவர் ஈடன் ஹசார்டும் கோலடித்து பெல் ஜியத்தின் வெற்றியை உறுதிசெய் தனர். உலகக் கிண்ண வரலாற்றில் பெல்ஜியத்தின் ஆகச் சிறந்த செயல்பாடு இதுதான். முன்னதாக, 1986 உலகக் கிண்ணத் தொடரில் அந்த அணி நான்காம் இடத்தைப் பிடித்தது.

போட்டி முடிந்தபின் பேசிய பெல்ஜிய அணியின் பயிற்றுவிப்பாளர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸ், "மெக்சிகோவில் 1986ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் விளையாடிய பெல்ஜிய அணியினர் எப்போதுமே எங்க ளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தனர். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, எங்களின் இலக்கை நிர்ணயித்தோம். "காலிறுதியில் பிரேசிலை வீழ்த் தியதும் எங்களின் கவனமெல்லாம் கிண்ணத்தை வெல்லவேண்டும் என்பதிலேயே இருந்தது. அது நிறை வேறாமல் போனாலும் யதார்த் தத்தை அறிந்துள்ளோம். பெல்ஜி யத்தைப் பொறுத்தமட்டில், நாங்கள் புதிய வரலாற்றைப் படைத்திருக் கிறோம். இந்த நிலையை எட்ட 32 ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்த வகையில், உண்மையிலேயே எங்களின் செயல்பாடு மனநிறைவு தருகிறது," என்று சொன்னார்.