டுரின்: இத்தாலியின் யுவெண் டஸில் இணைந்திருக்கும் போர்ச் சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ அக்குழு வுடன் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் வெற்றியைச் சுவைக்க இலக்கு கொண்டுள்ளார். தமது வயதில் இருக்கும் சில வீரர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சீனா அல்லது கத்தாரை நோக்கிச் செல்வதுண்டு என்றும் அவர்களிலிருந்து தாம் வேறு பட்டவன் என்றும் 33 வயது ரொனால்டோ தெரிவித்தார். நேற்று முன்தினம் இத்தாலியின் டுரின் நகரில் இருந்த ரொனால் டோவை வரவேற்க யுவெண்டஸ் ரசிகர்கள் பலர் திரண்டனர்.
ரொனால்டோ வெற்றி இலக்கு
1 mins read

