சிங்கப்பூரில் இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறுகிறது. பிரதான காற்பந்துப் போட்டி களின் புதிய பருவம் தொடங் குவதற்கு முன்பு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனலும் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட்டும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனும் களமிறங்குகின்றன. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் ஜெர்மனி முதல் சுற்றுடன் விடைபெற்றுக் கொண்டது. அக்குழுவுக்காக விளையாடிய நட்சத்திர வீரர் மெசுட் ஒசில் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட் டிக்காக சிங்கப்பூர் வருகிறார் என்றும் அவர் ஆர்சனலுக்காக விளையாடுவார் என்றும் ஆர்சன லின் புதிய பயிற்றுவிப்பாளர் உனாய் எமேரி உறுதி செய் துள்ளார்.
சிங்கப்பூரில் களமிறங்கும் ஒசில்
1 mins read

