சிகாகோ: காற்பந்துப் பருவத் திற்கு முந்தைய ஆயத்த நிலைப் போட்டியான அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட் டியில் பெப் கார்டியோலாவின் மான்செஸ்டர் சிட்டி குழு, ஜெர் மனியின் பொருஸியா டோர்ட் மண்ட் குழுவிடம் 1=0 எனும் கோல் கணக்கில் தோல்வி கண் டது. சிகாகோவின் 'சோல்ஜர் ஃபீல்ட்' அரங்கில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பொருஸியா டோர்ட்மண்டுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி அணித் தலைவர் மாரியோ கோட்ஸே கோலாக்கினார்.
அதுவே ஆட்டத்தின் ஒரே கோலாக இருந்த து. மான்செஸ்டர் சிட்டி குழுவில் புதிதாக ஒப்பந்தமான ரியாட் மஹ்ரேஸ் மற்றும் ஜெர்மனி வீர ரான லொஹுவா சனே ஆகிய வீரர்களை கார்டியோலா ஆட் டத்தில் களமிறக்கியிருந்தார். இருப்பினும், அதிக அனுபவம் இல்லாத, இளம் மான்செஸ்டர் சிட்டி வீரர்களால் திறமையில் டோர்ட்மண்ட் வீரர்களை எஞ்ச முடியவில்லை. இவ்வாண்டு அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி களின் முதல் ஆட்டத்தில் டோர்ட்ம ண்ட் வீரர்கள் கூர்மையுடன் விளையாடினர். பெனால்டி பகுதியில் டோர்ட் மண்டின் அமெரிக்க ஆட்டக்காரர் கிறிஸ்டியன் புலிசிச்சுக்கு எதிராக தவறிழைக்கப்பட்டதை அடுத்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோட்ஸே வெற்றி கோலை அடித்தார்.
மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு எதிராக அனைத்துலக வெற்றியாளர் கிண்ண ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் பொருஸியா டோர்ட்மண்டின் அணித் தலைவர் மாரியோ கோட்ஸே. படம்: ஏஎஃப்பி

