சிங்கப்பூரில் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்

சிங்கப்பூரில் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்

1 mins read

சிங்கப்பூர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனல், அடுத்த வாரம் இங்கு நடைபெறவுள்ள அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டி களில் களமிறக்கவுள்ள 25 வீரர்கள் அடங்கும் அணியை அறிவித்துள்ளது. ரஷ்யாவில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் முடிந்த நிலையில், மெசுட் ஓஸில், முகமது எல்னெனி, அலெக்ஸ் இவோபி ஆகியோர் குழுவில் இணைந்துள்ளனர். சிங்கப்பூரில் விளையாட ஆர் சனல் குழுவினர் இம்மாதம் தொடக்க முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று புறப்படுகின்றனர். ஆர்சனல் குழுவில் ஒப்பந்த மான ஐந்தில் மூன்று வீரர்கள் அணியில் இடம்பெறுகின்றனர். கோல்காப்பாளர் பெர்ண்ட் லீன், தற்காப்பு ஆட்டக்காரர், சாக்ரட்டிஸ் பப்பாஸ்தஃபோ, மத்திய திடல் ஆட்டக்காரர் மேத்யு கெண்டுஸி ஆகியோர் அந்த மூன்று வீரர்கள். ஆனால், சுவிட்சர்லாந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஸ்டெஃபன் லிச்ஸ்டைனர், உருகுவே மத்திய திடல் ஆட்டக்காரர் லுக்கஸ் டொரெய்ரா ஆகிய இருவரும் அணியில் இடம்பெறவில்லை.