ஜெர்மனியின் புண்டஸ்லீகா வெற்றியாளரான பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழு அடுத்த பருவத்திற்கான ஆயத்தத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆஸ்திரியாவின் கிளாகன்ஃபர்ட் நகரில் நடந்த அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஒன்றில் பயர்ன் குழு 3=1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் வெற்றியாளரான பிஎஸ்ஜி குழுவைத் தோற்கடித்தது. உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்ற இரு குழுக்களின் வீரர்களும் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
முற்பாதி ஆட்டத்தில் திமத்தி வெயா அடித்த கோல் மூலம் பிஎஸ்ஜி முன்னிலை பெற்றது. ஆனாலும், பிற்பாதியில் மார்ட்டினெஸ், சான்செஸ், ஸிர்க்ஸீ ஆகியோர் அடித்த கோல்களால் பயர்ன் வெற்றி பெற்றது. (படத்தில்) பிஎஸ்ஜி வீரர்களிடம் இருந்து பந்தைத் தற்காக்க முயலும் பயர்ன் வீரர் கிங்ஸ்லி கூமன் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

