அனைத்துலக வெற்றியாளர் கிண் ணப் போட்டிகளில் விளையாடு வதற்காக முன்னணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக் களில் ஒன்றான ஆர்சனல் நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தது. லண்டனில் இருந்து நேற்று அதிகாலை வந்திறங்கிய அக்குழு வினர் ஷங்ரிலா ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை வரவேற்க அக்குழுவின் ரசிகர்கள் பலர் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர். பல மணி நேர விமானப் பய ணத்தால் களைப்புடன் காணப் பட்டாலும் ஆர்சனல் ஆட்டக்காரர் கள் தங்களை வரவேற்ற ரசிகர் களுக்கு மகிழ்ச்சியுடன் 'ஆட்டோ கிராஃப்' போட்டுத் தந்தனர். அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டிகளில் பங்கேற் கும் 25 பேர் கொண்ட ஆர்சனல் குழு சில நாட்களுக்குமுன் அறி விக்கப்பட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ஜெர்மனியின் மெசுட் ஓஸில், எகிப்தின் முகம்மது எல் னெனி, நைஜீரியாவின் அலெக்ஸ் ஐவோபி ஆகியோர் ஆர்சனலுக்குத் திரும்பிவிட்டனர். அதேபோல, அக்குழுவுடன் புதி தாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஐவரில் கோல்காப்பாளர் பெர்ண்ட் லீனோ, தற்காப்பு ஆட்டக்காரர் சாக்ரடீஸ் பபாஸ்தஃபோக், மத்திய திடல் ஆட்டக்காரர் மேத்தியோ கியன்டூஸி என மூவர் மட்டும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போடும் ஆர்சனல் ஆட்டக்காரர்கள் பியர் எமரிக் ஒபமெயாங் (நடுவில்), ஹெக்டர் பெலரின். படம்: தி நியூ பேப்பர்

