ஆண்டர்சன்: ஓட்டம் குவிப்பது முக்கியம் அல்ல என கோஹ்லி பொய் சொல்கிறார்

ஆண்டர்சன்: ஓட்டம் குவிப்பது முக்கியம் அல்ல என கோஹ்லி பொய் சொல்கிறார்

1 mins read

மும்பை: ஓட்டமெடுப்பதைவிட வெற்றிதான் முக்கியம் என்று இந் திய கிரிக்கெட் அணித் தலைவர் கோஹ்லி சொன்னால் அது பொய் என்று இங்கிலாந்து பந்தடிப்பாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து=இந்தியா இடை யிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விராத் கோஹ்லி எப்படி விளையாடப் போகிறார் என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப் பாகவும் உள்ளது.

ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி யது. அப்போது கோஹ்லி 10 இன்னிங்சில் 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். கோஹ்லியின் மிகவும் மோசமான டெஸ்ட் தொடர் இதுவாகும். அதன்பின் இங்கிலாந்து இந்தியாவுக்கு வந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி யது. இந்தத் தொடரில் கோஹ்லி 655 ஓட்டங்கள் குவிக்க இந்தியா 4-0 எனத் தொடரை வென்றது. இங்கிலாந்து தொடர் குறித்து கோஹ்லி பேசுகையில், "இந்திய அணி வெற்றி பெறுகிறதா? என் பதுதான் முக்கியம். நான் ஓட்டம் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை," என்று கூறியிருந்தார்.