ராஞ்சி: கிரிக்கெட் விளையாட் டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி வருமான வரி செலுத்துவதிலும் முதல் இடம் பிடித்துள்ளார். பீகார்=ஜார்க்கண்ட் மாநிலத் தில் அதிக வருமான வரி செலுத் தியவர்களில் டோனி முதல் இடத்தைப் பிடித்தார். 2017=18ஆம் நிதியாண்டில் அவர் 12 கோடியே 17 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்தி உள்ளார். 2016=17ல் அவர் ரூ.10 கோடியே 93 லட்சம் வரி செலுத்தி இருந்தார். இவ்வாண்டு அதை விட ரூ.1.24 கோடி கூடுதலாக டோனி வருமானவரி கட்டியுள் ளார். தொடர்ந்து 6வது ஆண்டாக அவர் பீகார்=ஜார்க்கண்ட் மாநி லத்தில் அதிக வரி செலுத்து வதில் முதலிடத்தில் உள்ளார் டோனி. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.
வரி: தொடர்ந்து ஆறாவது ஆண்டாக டோனி முதலிடம்
1 mins read

