ஒஸில் குற்றச்சாட்டை மறுக்கும் ஜெர்மன் காற்பந்து கூட்டமைப்பு

ஒஸில் குற்றச்சாட்டை மறுக்கும் ஜெர்மன் காற்பந்து கூட்டமைப்பு

1 mins read
e16aacd2-76c6-401c-98b4-e54dd0e05603
-

பெர்லின்: ஜெர்மன் காற்பந்து வீரர் மெசுட் ஒஸிலின் குற்றச் சாட்டை அந்நாட்டு காற்பந்து கூட்டமைப்பு மறுத்துள்ளது. துருக்கி அதிபரை தான் சந் தித்தபோது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெர்மன் காற்பந்து கூட்டமைப்பு முன்வர வில்லை என்று குற்றம் சாட்டிய ஆர்சனல் வீரர் மெசுட் ஒசில் நேற்று முன்தினம் அனைத்துலக போட்டிகளில் இருந்து ஓய்வு பெறு வதாக அதிரடியாக அறிவித்தார். முன்னதாக கடந்த மே மாதம் லண்டனில் துருக்கி அதிபர் எர் டோகனை ஒஸிலும் கண்டோ கனும் சந்தித்தனர்.

இப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவ, ஜெர்மனியில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், கடந்த 2014ல் உலகக் கிண்ணம் வென்ற பிரே சில் அணி இவ்வாண்டு ரஷ்யாவில் நடந்த போட்டியில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதோடு துருக்கி அதிபர் சந்திப்பை முன்வைத்து, ஒசிலுக்கு இனி ஜெர்மனிக்காக விளையாடு வது பிடிக்கவில்லை என்று கிளப்பி விட்டனர்.

தேசிய அணியில் சிறந்த பங்காற்றிய மெசுட் ஒஸிலின் முடிவைத் தான் மதிப்பதாக கூறியுள்ளார் ஜெர்மானிய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல். மேலும் சக ஆட்டக்காரர்கள் பலரும் ஒஸிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம்