நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாமல் களமிறங்கும் பிஎஸ்ஜி

1 mins read
0c57ddd9-35b9-43b1-a81f-8779c051060e
-

அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துத் தொடரில் பங்கேற்பதற்காக பிரெஞ்சு லீக்கின் நடப்பு வெற்றியாளரான பாரிஸ் செயின்ட் ஜெர்மான் (பிஎஸ்ஜி) குழு நேற்றுக் காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தது. நெய்மார், கிலியன் எம்பாப்பே, தியாகோ சில்வா, எடின்சன் கவானி, ஏங்கல் டி மரியா போன்ற நட்சத்திர வீரர்கள் அவ்வணியில் இடம்பெறவில்லை. தேசிய விளையாட்டரங்கில் நாளை மறுநாள் இரவு நடக்கவிருக்கும் ஆட்டத்தில் ஆர்சனலுடன் மோதும் பிஎஸ்ஜி, இரண்டு நாட்களுக்குப் பின் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை எதிர்கொள்ளவிருக்கிறது. (படத்தில்) பிஎஸ்ஜி குழுவுடன் அண்மையில் இணைந்த முன்னாள் இத்தாலிய கோல் காப்பாளர் புஃபானுடன் படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்