முடியவே முடியாது: கார்டியோலா திட்டவட்டம்

1 mins read

ஈஸ்ட் ரூதர்ஃபோர்டு (அமெரிக்கா): கடந்த பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி குழு, பல சாதனைகளை முறியடித்து பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், இம்முறையும் அதுபோல் புதிய சாதனைகளைப் படைக்க சாத்தியமே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் அக்குழுவின் நிர்வாகியான பெப் கார்டியோலா. இபிஎல் வரலாற்றில் நூறு புள்ளிகளைத் தொட்ட முதல் குழு, அதிக புள்ளி வித்தியாசம் (19), அதிக கோல்கள் (106), அதிக கோல் வித்தியாசம் (+79), அதிக போட்டிகளில் வெற்றி (32), தொடர்ச் சியாக அதிக போட்டிகளில் வெற்றி (18) உட்பட 11 சாதனை களை சிட்டி தகர்த்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆர்சனல் குழுவுட னான ஆட்டத்துடன் 2018-19 பருவத்தை சிட்டி குழு தொடங்கு கிறது. இப்பருவத்திலும் பட்டத் தைத் தக்கவைக்கும் கனவுடன் களமிறங்கினாலும், "பிரிமியர் லீக் கில் நாங்கள் எந்தச் சாதனையையும் முறியடிக்கப்போவதில்லை. அது முடியவே முடியாது," என்று கார்டி யோலா கூறியுள்ளார்.