ஆர்சனல் காற்பந்துக் குழுவின் புதிய நிர்வாகியான உனாய் எமெரி, அனைத்துலகப் போட்டி களில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள அக்குழு வீரர் மெசுட் ஒஸிலின் முடிவை மதிப்ப தாகத் தெரிவித்துள்ளார். துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த மத்திய திடல் ஆட்டக் காரரான ஒஸில், ஜெர்மனிக்காக 92 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார்.
இந்நிலையில், ஜெர்மனி அணி உலகக் கிண்ணப் போட்டி களில் தோற்றதற்கு முக்கிய கார ணம் என ஒஸில் பலிகடா ஆக் கப்பட்டார். முன்னதாக, துருக்கி பிரதமர் எர்டோகனுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் விமர்சிக்கப் பட்டது. இதையடுத்து, ஜெர்மானியக் காற்பந்துச் சங்கம் தம்மை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதும் இனப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி, இனி மேல் ஜெர்மனிக்காக விளையாடப் போவதில்லை எனச் சில நாட்க ளுக்குமுன் ஒஸில் அறிவித்தார். இனத்தைக் காரணம் காட்டி ஒஸிலை பாரபட்சமாக நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எர்டோகனும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். 29 வயதான ஒஸிலின் முடிவு ஜெர்மனியில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

