மாஸ்கோ: பிரான்ஸ் வீரர் பெஞ்ச மின் பவார்ட் போட்ட கோல் இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியின் ஆகச்சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. சுமார் மூன்று மில்லியன் ரசி கர்களின் வாக்குகளைப் பெற்ற பவார்ட், அர்ஜெண்டினாவிற்கு எதிராக கோல் போட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. தற்காப்பு ஆட்டக்காரரான பவார்ட், "இம்மாதிரியான பந்தை எப்படி உதைக்க வேண்டும் என்று தாக்குதல் ஆட்டக்காரர் கள் கூறியதைப் போல் நான் செய்தேன்," என்றார்.
கொலம்பியா வீரர் யுவான் குவின்ட்ரோ ப்ரி-கிக் வாய்ப்பில் ஜப்பானுக்கு எதிராக போட்ட கோலுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. பிரான்சிடம் உலகக் கிண் ணத்தைத் தவறவிட்ட குரோ வேஷிய வீரர் லுக்கா மோட்ரிச் அர்ஜெண்டினாவிற்கு எதிராக போட்ட கோலுக்கு ரசிகர்கள் 3ஆம் இடம் அளித்து உள்ளனர்.

