சிட்டியை வீழ்த்தியது லிவர்பூல்

சிட்டியை வீழ்த்தியது லிவர்பூல்

1 mins read

நியூஜெர்சி: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழுவை லிவர்பூல் 2-1 என்று வீழ்த்தியது. அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது நடந்த அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற் பந்துப் போட்டியின் போது இக் குழுக்கள் மோதின. சிட்டியின் முதல் கோலைச் சமன் செய்தார் லிவர்பூல் நட்சத் திர வீரர் சாலா. காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின் போது சாடியோ மனே இன்னோர் கோலைப் போட சிட்டியை வீழ்த்தியது லிவர்பூல். உலகக் கிண்ணப் போட்டியின் காரணமாக சிட்டியின் முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக் கப்பட்டு இருந்தது.