'ஆண்டர்சன் பந்துவீச்சை சமாளித்துவிட்டால் வெற்றிதான்'

2 mins read

சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஆண்டர்சனின் பந்துவீச்சை சமாளித்துவிட்டால் இந்தியா வெற்றி பெறுவது எளிது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத். சென்னையிலுள்ள எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனில் பயிற்சி அளிக்கும் பிரிவின் இயக்குநராக இருக்கும் கிளென் மெக்ராத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, "இந்திய அணியின் பந்தடிப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் இந்திய வீர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சு, நெருக்கடியைத் தரும். அவர்தான் அந்த அணியின் முக்கியமான துருப்புச்சீட்டாக உள்ளார். "அவர் அபாயகரமான பந்துவீச் சாளராக இருக்கிறார். இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர் அருமை யாகப் பந்துவீசக் கூடியவர். "அவரை இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இருக்கும்.

"ஆண்டர்சனின் பந்துவீச்சை சமாளித்துவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. "ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. இங்கிலாந்து ஆடுகளங் களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை அருமையாக 'ஸ்விங்' செய்வார். அந்த 'ஸ்விங்' வகை பந்துவீச்சை சமாளிப்பது இந்திய அணியினருக்குப் பிரச்சினையாக இருக்கும். "பந்தடிப்பில் சிறந்து விளங்கும் இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் காயமடைந்து உள்ளனர். "எனவே இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை எப்படி இருக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு முக்கியமான விஷயம். "அணித் தலைவர் என்று எடுத்துக்கொள்ளும்போது விராத் கோஹ்லி, திறமையாகச் செயல் படுகிறார். இங்கிலாந்து ஆடுகளங் களில் சிறப்பாக விளையாடக் கூடியவர் அவர்.