அஸ்வின் புத்திசாலித்தனமான சுழல் பந்து வீச்சாளர்: மைக் ஹஸ்சி புகழாரம்

அஸ்வின் புத்திசாலித்தனமான சுழல் பந்து வீச்சாளர்: மைக் ஹஸ்சி புகழாரம்

1 mins read

சென்னை: இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை மறு நாள் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் சுழற் பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோ ர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்திப் யாதவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களைத் தன் பந்துவீச்சால் திணறடிக்கும் திறமை அஸ்வினுக்கே உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார். இடது கை பந்தடிப்பாளர்களைத் திணற அடிக்க அஸ்வி னால் மட்டுமே முடியும். எனவே அஸ்வினை இந்திய அணி நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.

குல்தீப் யாதவைப் பற்றி கூறுகையில், "குல்தீப் யாதவ் இளம் வீரர். அவரது வழியில் அவரை கற்றுக்கொள்ள வழிவிட வேண்டும். அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் தனது பணியைச் சிறப்பாகச் செய்வார் என்று உறுதியாகக் கூறலாம்," என்றார் மைக் ஹஸ்சி.