செய்தித்தாட்களைப் படிப்பதை நிறுத்துங்கள் என்று டோனி அறிவுரை

செய்தித்தாட்களைப் படிப்பதை நிறுத்துங்கள் என்று டோனி அறிவுரை

1 mins read

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் ஐயர், 24, இந்திய அணியில் இடம்பிடித்த பிறகு மகேந்திரசிங் டோனி தனக்கு வழங்கிய அறிவுரை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "செய்தித்தாட்களைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். அத்துடன் சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களில் இருந்தும் இயன்றவரை விலகியே இருங்கள் என்று டோனி, தமக்கு அறிவுரை கூறியுள்ளதாகக் கூறினார்.

"செய்தித்தாட்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நம்மைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கக்கூடாது. நமது முழுக் கவனமும் நாம் விளையாடும் ஆட்டத்தில்தான் இருக்க வேண்டும்," என்று டோனி தமக்கு அறிவுரை கூறியதாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.