எதிரணியோடு மோதல்; ரூனி மூக்கு உடைந்தது

எதிரணியோடு மோதல்; ரூனி மூக்கு உடைந்தது

1 mins read
0f4cdbde-831d-46a3-8027-f1572eb0e589
-

அமெரிக்காவின் 'எம்எஸ்எல்' மேஜர் லீக் காற்பந்துத் தொடரில் கொலராடோ ரேப்பிட்ஸ் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது டி.சி.யுனைடெட். இந்த ஆட்டத்தில் ரூனி டி.சி.யுனைடெட் குழுவிற்கான தனது முதல் கோலைப் போட்டார். ஆனால் காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின் போது ரூனியும் எதிரணி வீரர் ஏக்ஸல் ஸ்ஜோபர்க்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் ரூனியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மூக்கில் ஐந்து தையல் போடப்பட்டிருப்பதாக ரூனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: டி.சி.யுனைடெட் டுவிட்டர் பக்கம்