அனைத்துலக காற்பந்துத் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ஷிசோகோ கவலையளிக்க கூடிய நிலையில் இல்லை என்று கூறியுள்ளார் டோட்டன்ஹம் நிர்வாகி மௌரிசியோ போக்கெட்டினோ. பார்சிலோனாவிற்கு எதிரான போட்டியின் முதல் பாதி ஆட்டத்திலேயே தொடையின் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார் மத்திய திடல் வீரர் ஷிசோகோ. இது பற்றி உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "கவலையளிக்கக்கூடிய நிலையில் ஷிசோகா விற்கு பலத்த காயமில்லை என்று நினைக்கிறேன். அவர் சற்று சோர்வாக இருக்கிறார்," என்றார் போக்கெட்டினோ.
'ஷிசோகோ விரைவில் குணமடைவார்'
1 mins read

