பர்மிங்காம்: இந்தியா-இங்கிலாந்துக்கு இடையே நாளை நடக்கப் போகும் டெஸ்ட் கிரிக்கெட் போட் டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, இஎஸ்பிஎன் இணையத் தளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, "இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நாங்கள் அற்புதமாக ஆடினோம். "தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் ஓரளவு நன்றாகவே செயல்பட்டோம். அதே உத்வேகத்தை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம்.
"வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்து வதே எங்களுக்கு உள்ள சவாலாகும். "வெளிநாட்டு மண்ணில் சிறப் பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்திய அணியால் திகழ முடியும். "அதற்குரிய திறமை நம்மிடம் இருப்பதாக நம்புகிறோம். ஆனால் இன்றைய சூழலில் வெளிநாட்டு மண்ணில் எந்த அணியும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. "இலங்கையில் தென்னாப் பிரிக்க அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது. "2011ஆம் ஆண்டு இங்கிலாந் துக்குச் சென்ற போது 0=4 என்ற கணக்கில் தோற்றோம். 2014ஆம் ஆண்டு 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தோம். இந்த முறை அதைவிடச் சிறந்த முடிவு காணும் ஆவலில் உள்ளோம்," என்றார்.

