பெய்ஜிங்: சீனாவில் நடை பெற்று வரும் உலகப் பூப் பந்துப் போட்டியில் இந்தியா வெற்றிகளைப் பதிவு செய்து உள்ளது. இந்திய நட்சத்திரங்களின் அதிரடி ஆட்டத்தில் எதிரணி யினர் கதி கலங்கியுள்ளனர். சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் துருக்கியின் அலியே டெமிர்பேக்கை எதிர் கொண்டார். சக்கைப்போடு போட்ட சாய்னா 21=17, 21=8 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான ஒற்றை யர் பிரிவில் 5ஆம் நிலை வீரரான இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த் அயர்லாந் தின் நாட் நுயனை எதிர் கொண்டார். 21-15, 21-16 என ஸ்ரீகாந்த் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலகப் பூப்பந்துப் போட்டி: சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி
1 mins read

