ஆர்சனல் எதிர்பாரா வெற்றி

ஆர்சனல் எதிர்பாரா வெற்றி

2 mins read
0de9f8c4-6619-4ae5-a20a-427175e52639
-

டப்ளின்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுக் களான ஆர்சனலுக்கும் செல் சிக்கும் இடையே சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 90 நிமி டங்கள் முடிந்த நிலையில் கோல் எண்ணிக்கை 1-1 என்று இருந் ததால், ஆட்டம் பெனால்டி வரை சென்றது. அதில் 6-5 எனும் கணக்கில் ஆர்சனல் குழு செல்சியை வென்றது. இந்த ஆட்டத்தில் செல்சியின் கையே ஓங்கி இருந்ததால், ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு பெரும் ஏமாற் றத்தை அளித்தது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் செல்சி அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி அந்தோனியோ ருடிகர் லாபகரமாக பந்தைத் தலையால் முட்டி கோல் அடித்து அந்த அணிக்கு முன்னி லையைத் தந்தார்.

அதன் பின்னர், ஆர்சனல் அணி யின் ஹெக்டர் பெல்லரின் பெனால்டி எல்லைக்குள் செல் சியின் ஹட்சன்- ஒடோய் மீது இழைத்த தவறால் செல்சி க்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஆனால், அல்வாரோ மொராட்டா உதைத்த பந்தை வலைக்குள் புகவிடாமல் ஆர்சனல் கோல்காப்பாளர் பீட்டர் செக் எளிதாக தடுத்தார். இடைவேளை நெருங்கும் வேளை யில் ஹட்சன்=ஒடோயின் கோல் அடிக் கும் முயற்சியை மீண்டும் அபாரமாகத் தடுத் தார் முன்னாள் செல்சி கோல்காப் பாளரான செக். இந்நிலையில், ஆட்டத்தின் இரண் டாவது பாதியில் கோல் போட முயன்ற ஆர்சனல் வீரர்களுக்கு எளிதில் பலன் கிட்ட வில்லை. ஆனால், ஆட்டம் முடி வடைய வெறும் 17 வினாடிகளே எஞ்சி இருந்த வேளையில், 93வது நிமிடத்தில் ரெய்ஸ் நெல்சன் அனுப்பிய பந்தை பிரெஞ்சு வீர ரான அலெக்ஸாண்டர் லக்காஸெட் கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

பெனால்டியில் செல்சியின் அல்வாரோ மொராட்டா உதைத்த பந்தைத் தடுத்தார் ஆர்சனலின் பீட்டர் செக். படம்: ராய்ட்டர்ஸ்