நான்ஜிங்: பேட்மிண்டன் உலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி யில் காலிறுதிச் சுற்றோடு வெளியேறினார் இந்திய நட் சத்திரம் சாய்னா நேவால். சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொண்டார் சாய்னா. இதில் கடுமையாகப் போராடிய சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தி யாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன் னப்பா ஜோடியை சீனா வின் ஜெங் சிவெய்-ஹூவாங் யாகி கோன் ஜோடி 21-17, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி° வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
சாய்னா தோல்வி
1 mins read

