அபர்தீனை வீழ்த்தி பர்ன்லி முன்னேற்றம்

அபர்தீனை வீழ்த்தி பர்ன்லி முன்னேற்றம்

1 mins read
Google News Preferred Icon

பர்ன்லி: அபர்தீன் குழுவை வீழ்த் திய பர்ன்லி யூரோப்பா லீக் காற் பந்தாட்டத்தின் அடுத்த தகுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. யூரோப்பா லீக் தொடருக்கான இரண்டாவது தகுதிச் சுற்று ஆட் டத்தில் இக்குழுக்கள் மோதின. பர்ன்லியின் சொந்த அரங்கில் நடந்த இப்போட்டியில், அக்குழு வின் வுட் போட்ட முதல் கோலை அடுத்து ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-1 என பர்ன்லி முன்னிலை பெற்றது. முன்னதாக நடந்த அபர்தீன் குழுவின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டம் 1-1 என சமநிலை கண்டிருந்தது.

இந்நிலையில் பர்ன்லியின் முன் னிலையை 27வது நிமிடத்தில் உடைத்தார் அபர்தீன் வீரர் ஃபெர் குசன். தொடர்ந்து கோல் எதுவும் விழாததால் 1-1 எனச் சமநிலை கண்ட ஆட்டம் கூடுதல் நேரம் சென்றது. எனவே, 101வது நிமிடத்தில் கார்க் தலையால் முட்டி உதைத்த பந்து கோலானதால் பர்ன்லி வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தப்பாட்டம் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் பர்னேஸ் கோலாக்க 4-2 என்ற ஒட்டுமொத்த கோல் கணக்கில் பர்ன்லி வெற்றி பெற் றது. மூன்றாவது தகுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் சுற்றில் அடுத்த வியாழக்கிழமை இஸ்தான்புல் பஸக்சிர் குழுவை எதிர்கொள் கிறது பர்ன்லி.