கவிழ்ந்தது இந்திய அணி

கவிழ்ந்தது இந்திய அணி

1 mins read
73d7336d-6f92-40ed-a60f-a820a7455668
-

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. முதல் டெஸ்ட்டின் நான்காவது நாள் பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒருநாள் மிச்சம் இருக்க அதற்கு முன்பே இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அணித் தலைவர் ஜோரூட் 80 ஓட்டங்களும், விக்கெட்காப்பாளர் பேர்ஸ்டோ 70 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, அணித் தலைவர் விராத் கோஹ்லியின் (149 ஓட்டங்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ர‌ஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார் கள்.