பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறித்து விராத் கோஹ்லி கருத்துரைத்துள்ளார். "இந்த டெஸ்ட் மிகவும் சிறப்பானது. இந்தப் போட்டியில் நாங்கள் பல முறை திறமையை வெளிப்படுத்தினோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களைவிடச் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடி இருக்கலாம். இந்த டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிக்கிறது. இந்தப் போராட்டம் பிடித்து இருக்கிறது," என்றார் அவர்.
கோஹ்லி: போராடி தோற்றதில் பெருமை
1 mins read

