தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெப்போலியை வெளுத்துக் கட்டிய லிவர்பூல் அணி

2 mins read
80ecf8f1-2fc2-40f6-9575-e3be51aa0bf7
-

டப்ளின்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் லிவர்பூல், இத்தாலி யின் நெப்போலி காற்பந்து அணிகளுக்கு இடையே அயர்லா ந்தின் அவிவா விளையாட் டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் பின்னேரம் நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட் டியில் லிவர்பூல் 5=0 எனும் கோல் கணக்கில் நெப் போ லியை வெளுத்துக் கட்டி யது. ஆட்டம் தொடங்கிய 10 நிமிடங்களில் லிவர்பூல் ஆட்டக்காரர்களான ஜேம்ஸ் மில்னர், ஜார்ஜினோ வினால்ட் ஆகிய இருவரும் கோல் அடித்து அணிக்கு வலுவான முன்னிலையைத் தந்தனர்.

ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் லிவர் பூலுக்கு கிடைத்த சோதனையா க, நெப்போலி தற்காப்பு ஆட்டக்காரரான மாரியோ ருயியுடன் மோதிக்கொண் டதைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டவரான மில்ன ருக்கு தலையில் தையல் போடப்பட்டது. கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் 32 கோல்கள் அடித்து சாதனை படைத்த முகமது சாலா, 58வது நிமி டத்தில் ஆட்டத்தின் மூன்றாவ து கோலை அடித்தார். டேனியல் ஸ்டரிட்ஜ், அல் பேர்ட்டோ மொரினோ ஆகிய வீரர்கள் மேலும் இரு கோல் களை அடித்து லிவர்பூலுக்கு மாபெரும் வெற்றியைத் தந்தன ர். இத்தாலியின் ரோமா அணி யிலிருந்து 67 மில்லியன் பவுண்டுக்கு (S$120 மில்லி யன்) லிவர்பூலுக்கு விற்கப்ப ட்ட பிரேசில் கோல்காப்பாளர் அலிசன், இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக முதன் முறையாக விளையாடினார்.

லிவர்பூலின் எகிப்திய மத்திய திடல் ஆட்டக்காரரான முகமது சாலா (வலது), நெப்போலியின் சினேகல் தற்காப்பு ஆட்டக்காரரான கலிது குலிபலியுடன் பொருதுகிறார். படம்: ஏஎஃப்பி