வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை சுசுக்கி கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி 12வது முறையாக நடத்தப் படுகிறது. இதில் ஆசியானைச் சேர்ந்த பத்து நாடுகள் பங்குபெறும். ஒன்பது நாடுகள் நேரடித் தகுதி பெற்றுவிட்டன. பத்தாவது இடத்துக்காக புருணையும் திமோர் லெஸ்டேயும் அடுத்த மாதம் மோதுகின்றன. போட்டிக்குத் தகுதி பெறும் பத்து குழுக்கள் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவும் நான்கு ஆட்டங்களில் களமிறங்கும்.
இரண்டு ஆட்டங்கள் சொந்த மண்ணிலும் இரண்டு ஆட்டங்கள் எதிரணியின் விளையாட்டரங் கத்திலும் விளையாடப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சுசுக்கி கிண்ணத்தை தாய்லாந்து கைப் பற்றியது. இவ்வாண்டு நடைபெறும் போட்டியில் சிங்கப்பூர் 'பி' பிரிவில் இடம்பெறுகிறது.
வசதி குறைந்த சிறுவர்களுக்கு பாடாங் திடலில் காற்பந்துப் பயிற்சி அளித்த ஃபாண்டி அகமது (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

