லண்டன்: மகளிருக்கான உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் ஹாலந்து அணி வாகை சூடி கிண்ணம் ஏந்தியுள்ளது. 14வது மகளிர் உலகக் கிண்ண ஹாக்கி போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஹாலந்து 6-0 எனும் கோல் கணக்கில் அயர் லாந்தைப் பந்தாடி பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. உலகக் கிண்ணத்தை ஹாலந்து மகளிர் ஏந்துவது இது எட்டாவது முறையாகும். இறுதி ஆட்டத்துக்கு முன் னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3-1 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரேலி யாவை வீழ்த்தியது.
பந்துக்காகப் போராடும் அயர்லாந்தின் ஷர்லி மெக்கே (இடது), ஹாலந்தின் ஸான் டி வார்ட். படம்: ஏஎஃப்பி

