ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை அணி

ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை அணி

1 mins read
Google News Preferred Icon

கண்டி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது இலங்கை அணி. இலங்கை = தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 3=0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மழையின் காரணமாக ஆட்டம் 39 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர் களாக களமிறங்கினர். டிக்வெலா 34 ஓட்டங்களும் தரங்கா 36 ஓட்டங்களும் குசால் மெண்டிஸ் 11 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து குசால் பெரேரா அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். திசாரா பெரேராவும் டாசன் ஷனகாவும் அதிரடியாக விளை யாட இலங்கை அணி 300 ஓட்டங்களைக் கடந்தது.