லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் ஆர்சனலை எதிர்கொள்கிறது மான்செஸ்டர் சிட்டி. நாளை இரவு 11 மணிக்கு ஆர்சனலின் சொந்த அரங்கில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிட்டி குழுவின் முக்கிய வீரர்கள் சிலர் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. என்றாலும் பருவத்திற்கு முந் திய நட்புமுறை ஆட்டத்தில் அக் குழுவினர் சிறந்த முறையிலேயே விளையாடினர்.
கடந்த வாரம் கம்யூனிட்டி ஷீல்ட் காற்பந்து போட்டியில் செல்சி குழுவிற்கு எதிராக வலு வான சிட்டி குழுவை களமிறக்கி னார் அதன் நிர்வாகி பெப் கார்டி யோலா. இதில் டாவிட் சில்வா காயம் காரணமாக இப்போட்டியில் விளை யாடவில்லை. அதுபோல் கெவின் டி பிரய்ன போன்ற சிலரும் களம் காணவில்லை. ஆனாலும் செல் சியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி.
ஆர்சனலுக்கு எதிராக டாவிட் சில்வா களமிறங்குவாரா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலை யில், டானிலோவிற்கு உலகக் கிண்ணப் போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று கூறப் படுகிறது. அதே சமயம் செல்சிக்கு எதி ராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் ஸ்டோன்ஸ், லப்போட்டே ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் ஆர்சன லுக்குக் கடும் சவாலாக இருக்கக் கூடும்.
சிட்டி நிர்வாகி கார்டியோலாவும் ஆர்சனலின் புதிய நிர்வாகி உனை எம்ரியும். கோப்புப் படம்

