லண்டன்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பந்தடித்த இந்தியா 11 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டு களை இழந்து தத்தளித்தது. பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுப் புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
முரளி விஜய்க்கு ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5வது பந்திலேயே முரளி விஜய் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஓட்டம் எதுவும் எடுக்காமல் அவர் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7வது ஓவரை மீண்டும் ஆண்டர்சன் வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஓட்டங்கள் எடுத்த நிலையில் விக்கெட் காப் பாளரிடம் கேட்ச் கொடுத்து ஆட் டமிழந்தார். ஆண்டர்சனின் பந்துவீச்சில் முதல் இரண்டு விக்கெட்டுக்களை யும் இழந்ததால், இந்தியா 6.1 ஓவரிலேயே தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய வீரர் ராகுல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியைச் சக வீரர்களுடன் கொண்டாடும் இங்கிலாந்தின் ஆண்டர்சன். படம்: ராய்ட்டர்ஸ்

