மாண்ட்ரியல்: ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் ஸ்பெயி னின் ரஃபயேல் நடாலும் தகுதி பெற்றுள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆம் சுற்று ஆட்டத்தில் ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சைத் தோற் கடித்துக் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை ஹாலெப் எதிர்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹாலெப் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை சிறிது போராடி கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை எளிதாக வென்றார் சிமோனா. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள சிமோனா ஹாலெப். படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்

