ஸ்பெயின் வீரர் பிக்கே ஓய்வு

ஸ்பெயின் வீரர் பிக்கே ஓய்வு

1 mins read
Google News Preferred Icon

ஸ்பெயின் காற்பந்து அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெரர்ட் பிக்கே (படம்) அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 31 வயது மத்திய தற்காப்பு ஆட் டக்காரரான பிக்கே, 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்று இருந்தவர். மேலும் 2012 ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண வெற்றியிலும் இவ ருக்குப் பங்குண்டு. பிக்கே கடந்த மாதம் முடிவுற்ற உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கேற்று ஆடினார். ஆனாலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணமுடியாமல் ஸ்பெயின் அணி காலிறுதிச் சுற்றோடு வெளியேறியது.

காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பந்தைத் தடுத்தபோது பிக்கே கையில் பந்து பட்டதால் ரஷ்ய அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது விமர் சனங்கள் எழுந்தன. பார்சிலோனா அணியின் வெற்றிகளுக்காகக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் அனைத்துலகப் போட்டிகளிலிருந்து விலகு வதாகவும் இந்த முடிவை தாம் பல மாதங்களுக்கு முன்பே நன்கு சிந்தித்து எடுத்துவிட்ட தாகவும் பிக்கே கூறியுள்ளார்.