சிட்டி வீரர்களுக்குப் புகழாரம் சூட்டிய கார்டியோலா

சிட்டி வீரர்களுக்குப் புகழாரம் சூட்டிய கார்டியோலா

1 mins read
6e76e6a3-d26a-46ba-b5a7-328bb9f54851
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி புதிய பருவத்தை வெற்றி யுடன் தொடங்கி உள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனலை அது சந்தித்தது. இந்த ஆட்டம் ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய சிட்டி 2=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டர்லிங்கும் 64வது நிமிடத்தில் பெர்னாடோ சில்வாவும் சிட்டிக்காக கோல் போட்டனர். சிட்டியின் வீரர்கள் பலர் அண்மையில் ரஷ்யாவில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியில் விளையாடி இருந்தனர்.

அதில் விளையாடியதால் ஏற்பட்ட களைப்பு இன்னும் நீங்க வில்லை என்றபோதிலும் ஆர்ச னலுக்கு எதிராகக் களமிறங்க அவர்கள் முன்வந்ததைச் சுட்டிக் காட்டி சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா பாராட்டினார். கார்டியோலாவின் பாராட்டைப் பெற்ற வீரர்களில் ரஹீம் ஸ்டர்லிங், கைல் வாக்கர், ஜான் ஸ்டோன்ஸ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மூவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை முன்கூட்டியே முடித்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

மான்செஸ்டர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ வலை நோக்கி அனுப்பும் பந்தைப் பாய்ந்து தடுக்கும் செல்சி கோல் காப்பாளர் பீட்டர் செக். சிட்டியின் அதிரடி ஆட்டம் ஆர்சனலைத் தடுமாற வைத்தது. படம்: ராய்ட்டர்ஸ்